கொரோனா காலத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் 15 நாட்களுக்குள் சிறையில் சரணடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கொரோனா காலத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் 15 நாட்களுக்குள் சிறையில் சரணடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 March 2023 5:45 AM IST (Updated: 25 March 2023 5:46 AM IST)
t-max-icont-min-icon

புதுடெல்லி,

சிறைகளில் கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

அதில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், கொரோனா காலத்தில் ஏற்கனவே உயர் அதிகார குழுவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் 15 நாட்களுக்குள் சிறையில் சரணடைய வேண்டும் என தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்கனவே உயர் அதிகார குழுவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சரணடைய உத்தரவிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story