புனேவில் சூறாவளி காற்றுபோல சுழன்ற கொசுக்கள் - அச்சத்தில் மக்கள்


புனேவில் சூறாவளி காற்றுபோல சுழன்ற கொசுக்கள் - அச்சத்தில் மக்கள்
x

சூறாவளி காற்றுபோல கொசுக்கள் சுழன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள கேசவ் நகர் மற்றும் காரடி பகுதிகளில் திடீரென கொசுக்கள் சூறாவளி போன்று சுழன்றன. இது அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு கொசுக்கள் மக்கள் வாழும் இடத்திற்குள் நுழைந்தால் என்ன ஆவது? இதனால் ஏராளமான உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், புனே நிர்வாகம் உடனடியாக கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

முலா முதா ஆற்றின் நீர் அளவு உயர்வு இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரடி பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில் "எங்களுடைய பகுதியில் அதிக அளவிலான கொசுக்கள் உள்ளன. புனே மாநகராட்சி இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இது உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது" என்றார்.

மேலும் இது குறித்து அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் கூறுகையில் "சமீபத்தில் நான் அதிகப்படியான கொசுக்களை பார்க்கிறேன். கடந்த மூன்று நான்கு நாட்களாக இதுபோன்ற கொசு சூறாவளி சம்பவம் நடந்துள்ளது. இது கடினமான ஒன்றாகியுள்ளது. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என்றார். இந்த கொசு சூறாவளி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story