சீனா ராணுவ பயற்சி தீவிரம் : விமானங்களை ரத்து செய்தது தைவான்; போர் பதற்றம் அதிகரிப்பு


சீனா ராணுவ பயற்சி தீவிரம் : விமானங்களை ரத்து செய்தது தைவான்;  போர் பதற்றம் அதிகரிப்பு
x

தைவானில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்கள் என 40 விமானங்களை தைவான் ரத்து செய்துள்ளது.

பெய்ஜிங்,

தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இந்தநிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்தது. மேலும், தைவானை சுற்றி கடலில் போர் பயிற்சிகளை தீவிரமாக நடத்தியது. சில இடங்களில் தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது. இதனால் தென்சீன கடல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றதால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடியை நிச்சயம் கொடுப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது.

இன்று தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது. அங்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்பு இல்லாத வகையில் மிகப்பெரிய ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், தைவானில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்கள் என 40 விமானங்களை தைவான் ரத்து செய்துள்ளது. எனினும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை ராணுவ பயிற்சியுடன் தொடர்பு படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தைபே விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story