பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அரசுகளுடன் பேசுங்கள் - தொழில் நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை

Image Courtacy: PTI
தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அரசுகளுடன் பேசுங்கள் என்று தொழில் நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை வழங்கினார்.
புதுடெல்லி,
டெல்லியில், வர்த்தக சீர்திருத்த செயல் திட்ட மதிப்பீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது:- தொழில் நிறுவனங்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அந்தந்த மாநில அரசுகளுடன் பேச வேண்டும். அப்படி தொடர்ந்து பேசி வந்தால், நடவடிக்கை எடுப்பது சிக்கலாக இருந்தால் கூட மாநில அரசுகள் கனிவுடன் அணுகும்.
இப்போது, மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் அவை பின்வாங்கவில்லை. 1990-களில் சீர்திருத்தங்கள் திணிக்கப்பட்டன. இப்போது அதுபோன்ற கட்டாயம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story






