கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் சரிந்தது
இன்று வைரஸ் தொற்று 100-க்கும் கீழ் சரிந்துள்ளது. இதனால் சுகாதாரத்துறை சற்று நிம்மதி அடைந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் இன்று 20 ஆயிரத்து 444 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 89 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 2 பேருக்கும், பெங்களூரு புறநகர், கலபுரகி, ராமநகர், உத்தரகன்னடாவில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு புதிதாக உயிரிப்பு நிகழவில்லை. 1,666 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் மேல் பதிவாகி வந்தது. இந்த நிலையில் இன்று வைரஸ் தொற்று 100-க்கும் கீழ் சரிந்துள்ளது. இதனால் சுகாதாரத்துறை சற்று நிம்மதி அடைந்துள்ளது.
Related Tags :
Next Story