2024-25-ம் ஆண்டில் 3.2 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு - மத்திய அரசு தகவல்


2024-25-ம் ஆண்டில் 3.2 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு - மத்திய அரசு தகவல்
x

2024-25-ம் ஆண்டில் 3.2 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தலைமையில் மாநில உணவுத்துறை செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்குப்பின் மத்திய உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், '2024-25-ம் ஆண்டு குறுவை சந்தை பருவத்தில் 3 முதல் 3.2 கோடி டன் வரை கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது' என கூறப்பட்டு இருந்தது.

2023-24 பயிர் ஆண்டில் (ஜூலை-ஜூன்) 11.4 முதல் 11.5 கோடி டன் கோதுமை உற்பத்தியை விவசாய அமைச்சகம் எதிர்பார்க்கும் போதிலும் குறைந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதைப்போல நெல் கொள்முதலை பொறுத்தவரை 90 லட்சம் முதல் 1 கோடி டன் வரை குறுவை சந்தைப்பருவத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் உணவுத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.


Next Story