உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு வரி உயர்வு


உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு வரி உயர்வு
x

உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு மீண்டும் வரி உயர்த்தப்பட்டது.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அவற்றின் ஏற்றுமதி மீது மத்திய அரசு ஒரு மாதத்துக்கு முன்பு ஆதாய வரி விதித்தது. 2 வாரங்களுக்கு முன்பு, பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று டீசல் ஏற்றுமதி மீதான ஆதாய வரியை மத்திய அரசு பாதியாக குறைத்தது. லிட்டருக்கு ரூ.11-ல் இருந்து ரூ.5 ஆக குறைக்கப்பட்டது. விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான ஆதாய வரி ரத்து செய்யப்பட்டது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான ஆதாய வரி, 2 வாரங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டது. ஆனால், நேற்று மீண்டும் வரி உயர்த்தப்பட்டது. டன்னுக்கு ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரத்து 750 ஆக உயர்த்தப்பட்டது.

இதனால், ஓ.என்.ஜி.சி., வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததாலும், ரூபாய் மதிப்பு குறைந்து வருவதாலும் மேற்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.


Next Story