மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்


மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
x
தினத்தந்தி 29 May 2023 7:02 AM GMT (Updated: 29 May 2023 7:05 AM GMT)

மத்திய பிரதேசத்தில் வழக்கமான பயிற்சிக்கு சென்ற அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில் தொழில் நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லி,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான அப்பாச்சி ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு எற்பட்டதால் மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிரக்கப்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் தன் பயணத்தை மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய விமானப்படை தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: வழக்கமான பயிற்சியின்போது ஹெலிகாப்டர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிந்த் மாவட்டத்தில் தரையிரக்கப்பப்பட்டது. வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டருக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரிசெய்யும் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அதில் கூறியுள்ளனர். எனினும், விமானத்தில் எந்த விதமான கோளாறு ஏற்பட்டது என்பது பற்றி விமானப்படை எதுவும் தெளிவாக குறிப்பிடவில்லை.


Next Story