போதை பொருட்கள் விற்ற வாலிபர் கைது


போதை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 March 2023 11:00 AM IST (Updated: 21 March 2023 11:00 AM IST)
t-max-icont-min-icon

சுள்ளியாவில் போதை பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா கசாபா கிராமத்தில் போதைப் பொருட்களை விற்பனை நடைபெறுவதாக சுள்ளியா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுள்ளியா சப்- இன்ஸ்பெக்டர் திலீப் தலைமையிலான போலீசார் கசாபா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது குருஞ்சி குடே பகுதியில் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் காரில் இருந்த நபர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெத்தாம்பாடியை சேர்ந்த கபீர் (வயது36) என்பதும், காரில் வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை கபீர் விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.1.32 லட்சம் மதிப்பிலான 40 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கபீரை சுள்ளியா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story