தார்வாரில் 2¾ கிலோ கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது


தார்வாரில்   2¾ கிலோ கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 March 2023 11:00 AM IST (Updated: 21 March 2023 11:00 AM IST)
t-max-icont-min-icon

தார்வாரில் 2¾ கிலோ கஞ்சா விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் (தாலுகா) சிக்கமல்லிகை வாடா கிராமத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வாலிபர் ஒருவர் பைக்கில் சுற்றி கொண்டிருந்தார். அவரை மடக்கி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ 750 கிராம் கஞ்சா இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தார்வார் தடகோட் கிராமத்தை சேர்ந்த மடிவாளப்பா (வயது 38) என்பது தெரியவந்தது. இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதாக தெரியவந்தது. இது குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்த தார்வார் புறநகர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story