மனைவியுடன் கள்ளத்தொடர்பு: ஆயுதத்தால் தாக்கி வாலிபரை கொன்ற தொழிலாளி கைது


மனைவியுடன் கள்ளத்தொடர்பு:  ஆயுதத்தால் தாக்கி வாலிபரை கொன்ற தொழிலாளி கைது
x

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆயுதத்தால் தாக்கி வாலிபரை கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

யாதகிரி: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் கடேசூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது 25). இந்த நிலையில் நாகராஜ் மனைவிக்கும், சித்தப்பாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு உண்டானது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நாகராஜ் மனைவி வேலை செய்த போது, அவருக்கும் சித்தப்பாவுக்கும் இடையே பழக்கம் உண்டாகி, கள்ளத்தொடர்பாக மாறி இருந்தது. இதுபற்றி சமீபத்தில் நாகராஜிக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவி மற்றும் சித்தப்பாவை கண்டித்ததாக தெரிகிறது. ஆனால் நாகராஜின் மனைவியும், சித்தப்பாவும் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளனர்.

இதுபற்றி நேற்று முன்தினம் நாகராஜிக்கும், சித்தப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரமடைந்த நாகராஜ் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி சித்தப்பாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைதாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story