இன்று மிகத்தீவிர புயலாக உருவெடுக்கிறது 'தேஜ்' - வானிலை ஆய்வு மையம் தகவல்


இன்று மிகத்தீவிர புயலாக உருவெடுக்கிறது தேஜ் - வானிலை ஆய்வு மையம் தகவல்
x

அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘தேஜ்’ புயலானது இன்று மிகத்தீவிர புயலாக உருவெடுக்கிறது.

சென்னை,

கடந்த 19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றய நாள் நள்ளிரவிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு 'தேஜ்' என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த புயல் நேற்று தீவிர புயலாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது . மேலும் இந்த புயலானது அதி தீவிர புயலாக மாறி, வருகிற 25ம் தேதி அதிகாலை ஓமன் மற்றும் ஏமன் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தென்மேற்கு அரபிக் கடலில், நிலைகொண்டுள்ள இந்த அதிதீவிர 'தேஜ்' புயல், இன்று மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறுகிறது. இது நாளை மறுநாள் அதிகாலை ஓமன் மற்றும் ஏமனுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story