முஸ்லிம் ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: தெலுங்கானா அரசு


முஸ்லிம்  ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: தெலுங்கானா அரசு
x
தினத்தந்தி 11 March 2024 9:28 AM GMT (Updated: 11 March 2024 10:45 AM GMT)

முஸ்லிம் அரசு ஊழியர்கள் அலுவலகங்களை விட்டு ஒரு மணி நேரம் முன்னதாக வெளியேறலாம் என்று தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

ஐதராபாத்,

ரம்ஜான் பண்டிகைக்காக முஸ்லிம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நேரத்தை தெலுங்கானா அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: - ரம்ஜான் பண்டிகைக்காக முஸ்லிம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகம், பள்ளியை விட்டு வெளியேற அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஒப்பந்தம், அவுட்சோர்சிங், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு அரசின் இந்த உத்தரவு பொருந்தும். மார்ச் 12 முதல் ஏப்ரல் 11 வரை முஸ்லிம் அரசு ஊழியர்கள் அலுவலகங்கள் அல்லது பள்ளிகளை விட்டு ஒரு மணி நேரம் முன்னதாக வெளியேறலாம். புனித ரம்ஜான் மாதம் முழுவதும், அவர்கள் மாலை 4 மணிக்கு பணியிடங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story