தெலுங்கானா: பள்ளி திறப்பு விழாவை தானே நடத்திய அதிகாரி - ஆத்திரத்தில் தாக்கிய எம்எல்ஏவால் பரபரப்பு


x

எம்எல்ஏ தாமதமாக வந்ததால், மாவட்ட கல்வித் துறை அதிகாரி, பள்ளியைத் திறந்து வைத்ததால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரைத் தாக்கினார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி திறப்பு விழாவுக்கு எம்எல்ஏ தாமதமாக வந்ததால், மாவட்ட கல்வித் துறை அதிகாரி, பள்ளியைத் திறந்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரைத் தாக்கினார்.

கத்வாடு நகரில் குருகுல பள்ளி திறப்பு விழாவுக்கு ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி எம்எல்ஏ கிருஷ்ணமோகன் ரெட்டியை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தனர். அவர் வருவதற்கு தாமதமானதால் மாவட்ட கல்வி அதிகாரியே பள்ளியைத் திறந்து வைத்தார்.

தாமதமாக அங்கு வந்த எம்எல்ஏ, பெண் கல்வித்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததுடன் அருகில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை சட்டையைப் பிடித்து கீழே தள்ளினார். எம்எல்ஏவின் இந்த செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story