தெலுங்கானா: குடியிருப்பு பகுதியில் திடீர் வெடிவிபத்து.. அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்கள்
தெலங்கானா மாநிலம் கோபால்பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம் கோபால்பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியின் முதல் தளத்தில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபால்பேட்டை பகுதியில், பயங்கர சத்தத்துடன் வீடு ஒன்றின் முன் பகுதி வெடித்து சிதறியது. இதில் அந்த தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள் பலரும் தூக்கி வீசப்பட்டனர்.
வீட்டில் இருந்த 2 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story