"மட்டன் பீசுக்காக மல்லுக்கட்டிய கட்சியினர்" கறி குழம்பு பாத்திரத்தை இழுத்து சென்ற தொண்டர்கள்


மட்டன் பீசுக்காக மல்லுக்கட்டிய கட்சியினர் கறி குழம்பு பாத்திரத்தை இழுத்து சென்ற தொண்டர்கள்
x

கறிக்குழம்பு வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தை தூக்க முடியாமல் இழுத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

ஐதராபாத்

தெலங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் சிரோலு நகரில் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் கட்சி தொண்டர்களுக்கு பரிமாறுவதற்காக கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிக அளவில் தொண்டர்கள் வந்திருந்ததால், அனைவருக்கும் கறி விருந்து கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது.

இதனை கவனித்த தொண்டர்கள் ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்காக முட்டி மோதிக் கொண்டனர். இந்நிலையில் ஒரு சில தொண்டர்கள் நமக்கு எப்படியும் கறி விருந்து கிடைக்காது என்று முடிவு செய்து, கறி குழம்பு வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தை தூக்க முடியாமல் இழுத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை கவனித்த மற்ற தொடர்கள் நாற்காலி, கட்டை ஆகியவற்றால் கறி குழம்பு பாத்திரத்தை இழுத்து சென்ற தொண்டர்களை தாக்கினர்.

பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார் தலையிட்டு நிலைமை கை மீறி செல்லாமல் தடுத்து நிறுத்தினர்.


Next Story