ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்: பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்:  பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 30 Sept 2022 4:36 PM IST (Updated: 30 Sept 2022 5:09 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். பாரமுல்லா பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் நடந்தது.

இதில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருவதாகவும், இதுதொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.


Next Story