"எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியா வரவேற்கிறது ஆனால் ... " - மத்திய மந்திரி மகேந்திர நாத் பாண்டே


எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியா வரவேற்கிறது ஆனால் ...  - மத்திய மந்திரி மகேந்திர நாத் பாண்டே
x

Image Courtesy : AFP 

டெஸ்லா கார்களை விற்பனை செய்ய மத்திய அரசு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மஸ்க் கூறி வருகிறார்.

புதுடெல்லி,

உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். உலகம் முழுவதும் பல நாடுகளில் டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய மத்திய அரசு அதன் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மஸ்க் தொடர்ந்து கூறி வருகிறார்.

டெஸ்லா கார்களை முதலில் இந்தியாவில் விற்கவும், சேவை செய்யவும் அனுமதிக்காத வரை, இந்தியாவில் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய மாட்டோம் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான மத்திய மந்திரி மகேந்திர நாத் பாண்டே பேசியுள்ளார்.

டெஸ்லா மற்றும் மஸ்க் குறித்து மகேந்திர நாத் பாண்டே கூறியதாவது :

பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு 'ஆத்மநிர்பர் பாரத்' கொள்கையில் வேகமாக முன்னேறி வருகிறது. அதில் நாங்கள் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. டெஸ்லா மற்றும் எலான் மஸ்க்-கை இந்தியாவிற்கு வரவேற்கிறோம். ஆனால் நாட்டின் கொள்கைகளின்படி மட்டுமே. அரசின் சட்ட திட்டங்களை அவர்கள் பின்பற்றி ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தற்போது, இந்தியாவில் 40,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான CIF (செலவு, காப்பீடு மற்றும் சரக்கு) மதிப்புள்ள முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story