மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு


மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு
x

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடன் அதிமுக எம்.பி., தம்பிதுரை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து இப்போது முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது என்றும் கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தான் அமித்ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இதனைதொடர்ந்து கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில்,டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமிஷாவுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என தம்பிதுரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான சில விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடியை அதிமுக எம்.பி.தம்பிதுரை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தகக்து. சில நாட்களுக்கு முன் அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசிய நிலையில் தம்பிதுரை சந்தித்து பேசினார்.


Next Story