அடுத்த ஆண்டு நடக்கிறது; 14-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி பணிகள் தொடங்கியது


அடுத்த ஆண்டு நடக்கிறது; 14-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி பணிகள் தொடங்கியது
x

அடுத்த ஆண்டு நடக்கும் 14-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி பணிகள் தொடங்கியது

பெங்களூரு: கர்நாடக அரசு ராணுவத்துறையுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை நடத்துகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற விமான கண்காட்சியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2023) 14-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் நடைபெற உள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தொடங்கிவிட்டது. மாநில அரசின் உள்கட்டமைப்புகள் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ்குப்தா தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலுக்கு முன்பு நடத்தப்பட்டது போல் வருகிற ஆண்டு விமான கண்காட்சியை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வசதிக்காக சுமார் 15 ஆயிரம் கார்கள் நிறுத்தும் அளவுக்கு 'பார்க்கிங்' வசதி செய்யப்பட உள்ளது. கண்காட்சியை பார்க்க 2 காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. காலை 9 மணிக்கு முதல் காட்சியும், மதியம் 2 மணிக்கு 2-வது காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.


Next Story