ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
55 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது.
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணறு குழிக்குள் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
ஆழ்துளை குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 55 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குழந்தையை மீட்டனர்.
மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story