2-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்


2-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்
x

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:-

ஜனதாதளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தேவை இல்லை

ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து பிற கட்சிகளுக்கு சென்ற தலைவர்கள் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்ப ஆலோசனை நடத்துகிறார்கள். வட கர்நாடகததில் ஜனதாதளம் (எஸ்) கட்சி இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இன்று அந்த பகுதியில் எங்கள் கட்சி பலம் அடைந்து வருகிறது. ஒய்.எஸ்.வி. தத்தா என்னுடன் தொடர்பில் இல்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் அவருக்கும், எனக்கும் இடையே தொடர்பு இருக்கவில்லை.

எங்கள் கட்சியின் 2-வது பட்டியல் நாளை (இன்று) வெளியிடப்படும். இந்த பட்டியலை வெளியிட நான் மன ரீதியாக தயாராகியுள்ளேன். ஹாசன் தொகுதி டிக்கெட் குறித்து யாரும் கவலைப்பட தேவை இல்லை. இந்த விவகாரத்தை நாங்கள் தீா்த்து கொள்வோம். எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நான் ஏற்கனவே அறிவித்த முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்களில் 7, 8 பேர் சரியாக பணியாற்றவில்லை.

அதிர்ச்சி கொடுக்கிறோம்

இந்த முறை சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் நான் தீவிரமாக பணியாற்றி வருகிறேன். பிற கட்சிகளை சேர்ந்த பலர் நாளை (இன்று) முதல் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர உள்ளனர். முன்பு எங்கள் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தவர்களுக்கு, தற்போது நாங்கள் அதிர்ச்சி கொடுக்கிறோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story