3-வது பிரசவத்திலும் பிறந்த பெண் குழந்தை... தனிஅறையில் அடைத்து கைகளை உடைத்து மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்


3-வது பிரசவத்திலும் பிறந்த பெண் குழந்தை... தனிஅறையில் அடைத்து கைகளை உடைத்து மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்
x

3-வது பிரசவத்திலும் பெண்குழந்தையை பெற்றதால் மனைவியின் கைவிரல்களை உடைத்து தனி அறையில் அடைத்து வைத்து கணவன் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர்,

ஆந்திராவில் 3-வது பிரசவத்திலும் பெண்குழந்தையை பெற்றதால் மனைவியின் கைவிரல்களை உடைத்து தனி அறையில் அடைத்து வைத்து கணவன் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வரும் சந்த் பாஷா - சபீஹா தம்பதிக்கு, ஏற்கனவே 2 பெண்கள் குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது பிரசவத்திலும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதில் கோபமடைந்த சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினர், சபீஹாவின் கை விரல்களை உடைத்தும், தனி அறையில் அடைத்தும் சித்திரவதை செய்துள்ளனர்.

சாப்பிட உணவு கூட கொடுக்காததால் அடைத்து வைக்கப்பட்ட அறையில் இருந்த குழாய் தண்ணீரை மட்டுமே பருகி, சபீஹா உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் சபீஹா நீண்ட நாட்களாக வெளியே வராததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இதுதொடர்பாக அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சபீஹாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சபீஹா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story