டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது..!


டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது..!
x
தினத்தந்தி 12 Sept 2023 9:37 AM IST (Updated: 12 Sept 2023 11:15 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது.

புதுடெல்லி,

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம்- தமிழ்நாடு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில், வழக்கமான நடைமுறையின்படி தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. கர்நாடக அணைகளில் தண்ணீர் மோதுமான அளவில் இல்லை என கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டிற்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்ற கருத்தை வலியுறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியதாக கூறி, காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவிடம் தமிழ்நாடு அரசு சார்பில் புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story