மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் புதிய வழிகாட்டுதல் குழு அறிவிப்பு!


மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் புதிய வழிகாட்டுதல் குழு அறிவிப்பு!
x

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் புதிய வழிகாட்டுதல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கட்சியின் விவகாரங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். அதில், சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே. அந்தோனி, ப.சிதம்பரம் உள்பட 47 பேருக்கு வழிகாட்டுதல் குழுவில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெறவில்லை.மேலும், பிரியங்கா காந்தி, ஏ.கே. ஆண்டனி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கார்கே அமைத்துள்ள வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், ஏ.செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


Next Story