கர்நாடகாவில் நடந்த ஊழல்கள் குழந்தைக்கும் தெரியும் - ராகுல்காந்தி
கர்நாடகாவில் நடந்த ஊழல்கள் 8 வயது குழந்தைக்கு கூட தெரியும் என கர்நாடகாவில் ராகுல்காந்தி பேசினார்.
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதனால் இரு கட்சி தலைவர்களும் அங்கு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கர்நாடகாவில் உள்ள ஆனேகல் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-
கர்நாடகாவில் எங்கு பார்த்தாலும் மோசடிகள். எம்எல்ஏ மகன் 8 கோடியுடன் பிடிபட்டார், முதல்-மந்திரி நாற்காலியை 2,500 கோடிக்கு வாங்கலாம் என்று பாஜக எம்எல்ஏ கூறுகிறார்.
கர்நாடகாவில் நடந்த ஊழல் 6 வயது குழந்தைக்கு கூட தெரியும். கடந்த 3 ஆண்டுகளாக இங்கு பாஜக அரசு ஆட்சி செய்துள்ளது. பிரதமர் மோடிக்கும் கர்நாடக ஊழல் பற்றி நன்றாக தெரியும். இரட்டை எஞ்சின் திருடப்பட்டது என்று கூறியிருந்தீர்கள், எனவே 40% எந்த இன்ஜினில் எவ்வளவு கிடைத்தது என்று சொல்லுங்கள் மோடி ஜி என கேள்வி எழுப்பி உள்ளார்.