பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் தூக்க மாத்திரை சாப்பிட்டு டாக்டர் தற்கொலை முயற்சி


பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால்  தூக்க மாத்திரை சாப்பிட்டு டாக்டர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:45 PM GMT)

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் தூக்க மாத்திரை சாப்பிட்டு டாக்டர் தற்கொலை முயற்சி செய்தார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டராக இருப்பவர் சந்தீப். இவர் மதுகுடித்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வருவதாக புகார் எழுந்தது. மேலும் சந்தீப் பணியில் அலட்சியம் காட்டி வந்ததாகவும், இரவு வீட்டிற்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு ஆஸ்பத்திரியில் தூங்கியும் வந்துள்ளார்.

இதுகுறித்து தாலுகா தலைமை மருத்துவ அதிகாரி நயனாவுக்கு புகார் சென்றது. அதன் போில் அவர் விசாரணை நடத்தி சந்தீப்பை பணியிடை நீக்கம் செய்தார். இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தீப் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக என்.ஆர்.புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிக்கமகளூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சந்தீப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக சந்தீப் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

இதனால் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலேஹென்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story