பேட்ராயனபுராவில் வெற்றி பயணத்தை தொடருவாரா கிருஷ்ண பைரேகவுடா?


பேட்ராயனபுராவில் வெற்றி பயணத்தை தொடருவாரா கிருஷ்ண பைரேகவுடா?
x

வேட்பாளர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்வதை தேர்தல் ஆணையம் கண்காணிப்பதில்லை என்று வாட்டாள் நாகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

சாம்ராஜ்நகர்:-

சாம்ராஜ்நகர் தொகுதியில் வாட்டாள் சலுவளி கட்சி சார்பில் வாட்டாள் நாகராஜ் போட்டியிடுகிறார். இவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்கூறியதாவது:-

கர்நாடகத்தில் தேர்தல் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. 3 அரசியல் கட்சிகளும் கோடி கோடியாய் பணத்தை அள்ளி வீசுகின்றன. வேட்பாளர்களின் வெற்றிக்காக பல கோடி ரூபாய் பணத்தை கொடுத்து வருகிறார்கள். இது அரசியலமைப்பு தேர்தல் அல்ல. தேர்தல் கமிஷன் சுதந்திரமான அமைப்பு எனில், கர்நாடக சட்டசபை தேர்தலை ரத்து செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலையொட்டி தினமும் 30-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களில் அரசியல் கட்சியினர் பிரசாரத்திற்காக செல்கிறார்கள். இந்த செலவையும் வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்க வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் தேர்தல் செலவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேர்தலுக்கு பணத்தை பல வேட்பாளர்கள் பல கோடி வரை வாரி இறைக்கிறார்கள். ஆனால் இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இப்போதைய நிலையை பார்க்கும்போதும் தேர்தல் ஆணையம் ெசத்துவிட்டது. மேலும் ஹெலிகாப்டர் செலவையும் வேட்பாளர்களின் கணக்கில் சேர்த்து அவர்களை தகுதி நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலை புனிதமாக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொக்லைன் வாகனம் மூலம் ராட்சத மலர் மாலைகள், பழ மாலைகள் அணிவிக்கும் கலாசாரமும் பெருகி வருகிறது. இந்த செலவையும் வேட்பாளர்கள் கணக்கில் கொண்டுவர வேண்டும். சாமானிய மக்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. நான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பல வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். காவிரி நீர் வழங்க கடுமையாக உழைத்துள்ளேன். எனவே இந்த தேர்தலில் எனக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story