தேர்தல் பத்திரங்கள் பற்றிய கேள்வி: முத்திரை தாளில் தேர்தல் கமிஷன் விளக்கம் அளிக்க வேண்டும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவு


தேர்தல் பத்திரங்கள் பற்றிய கேள்வி: முத்திரை தாளில் தேர்தல் கமிஷன் விளக்கம் அளிக்க வேண்டும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
x

புதுடெல்லி,

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தேர்தல் கமிஷனிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு, நிதி சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு ஆவணங்களையும் கேட்டிருந்தார்.

அதற்கு தேர்தல் கமிஷன் சில ஆவணங்களை அளித்திருந்தது. ஆனால், தேர்தல் கமிஷன் பல ஆவணங்களை மறைத்து விட்டதாக மத்திய தகவல் ஆணையத்தில் லோகேஷ் பத்ரா புகார் மனு அளித்தார். ஆனால் தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் அளித்து விட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

தலைமை தகவல் ஆணையர் ஒய்.கே.சின்கா முன்னிலையில் இதன் விசாரணை நடந்தது. அப்போது, தகவல் சட்டப்படி அளிக்கப்படக்கூடிய வேறு எந்த ஆவணமும் தங்களிடம் இல்லை என்பதை முத்திரைத்தாள் மூலம் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டார்.

1 More update

Next Story