ஸ்கூட்டரை அணைக்காமல் இருந்த தந்தை; ஆக்சலேட்டரை திருகிய மகனால் விபத்து: வைரலான வீடியோ
மராட்டியத்தில், ஸ்கூட்டர் என்ஜினை தந்தை அணைக்காத நிலையில், ஆக்சலேட்டரை திருகிய மகனால் இருவரும் விபத்தில் சிக்கிய வீடியோ வெளிவந்துள்ளது.
புனே,
மராட்டியத்தில் சிந்துதுர்க் பகுதியில் வீடு ஒன்றின் முன்னால் தந்தை மற்றும் மகன் என இருவரும் ஸ்கூட்டி ஒன்றில் அமர்ந்து இருக்கின்றனர். அந்த வண்டியின் என்ஜின் அணைக்காத நிலையில் இருந்துள்ளது.
வீட்டில் இருந்த ஒருவரை எதிர்பார்த்து அந்த நபர் வண்டியில் காத்திருந்து உள்ளார். இந்நிலையில், வண்டியின் முன்பக்கம் நின்றிருந்த அவரது மகன் திடீரென ஆக்சலேட்டரை திருகியுள்ளான்.
இந்த சம்பவத்தில் வண்டி விரைவாக முன்னோக்கி சென்று மோதி கவிழ்ந்துள்ளது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் பதறியபடி ஓடி வந்தனர். அவர்களில் ஒருவர் சிறுவனை தூக்கி செல்கிறார்.
கீழே விழுந்த அந்த நபரை மீட்டு செல்ல முயற்சிகள் நடந்தன. அதிர்ச்சி ஏற்படுத்த கூடிய, டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ள இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story