தரமான கல்வி, வேைலவாய்ப்பு வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது


தரமான கல்வி, வேைலவாய்ப்பு வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது
x
தினத்தந்தி 13 Dec 2022 2:22 AM IST (Updated: 13 Dec 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மக்களுக்கு தரமான கல்வி, வேலைவாய்ப்பு வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று மந்திரி அஸ்வத் நாராயண் பேசினார்.

ஹலகூர்:-

அஸ்வத்நாராயணுக்கு பாராட்டு விழா

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் பிஷு மடத்தில் கெம்பேகவுடா அமைப்பு சார்பில் மந்திரி அஸ்வத் நாராயணுக்கு பாராட்டு விழா நடந்தது. அதாவது, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் 108 அடி உயர கெம்பேகவுடா சிலை வைக்க நடவடிக்கை எடுத்ததற்கு இந்த பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் மந்திரி அஸ்வத்நாராயணுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மாநில அரசு உறுதி

சமுதாயத்தில் அனைவரையும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. அனைவருக்கும் ஒரு கனவு, லட்சியம் இருக்கும். அதனை நிறைவேற்ற அடித்தளத்தை நாங்கள் உருவாக்குவோம். மக்களின் வளர்ச்சிக்காக நான் எப்போதும் பாடுபடுவேன். அதற்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கும்.

மாநில மக்களுக்கு தரமான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சிறந்த வாழ்க்கையை வழங்குவதில் பா.ஜனதா தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

கெம்பேகவுடாவால் நிர்மாணிக்கப்பட்ட பெங்களூரு நகரம், தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் புகழ்பெற்று விளங்குகிறது. பெங்களூரு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடா சிலை சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

கங்கை மேம்பாட்டு ஆணையம்

நாட்டின் பெரிய மகான்களை நினைவுகூறும் வகையில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. பின்வரும் நாட்களில் 'கங்கை மேம்பாட்டு ஆணையம்' உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அம்பேத்கர் உலகிற்கு முன்மாதிரியாக அரசியலமைப்பை உருவாக்கினார். இந்தியா மிகவும் மதிப்புமிக்க ஜனநாயக நாடு. நாட்டின் பொருளாதாரம் அரசியலமைப்பு மூலம் பலப்படுத்தப்படுகிறது. சாமானிய மக்களின் கனவையும் நிறைவேற்ற அடித்தளம் அமைக்க எங்கள் அரசு பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story