மனைவியை பிரிந்த மன உளைச்சல்... கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட தெருவில் ஓடிய நபர்..!
தலைநகர் டெல்லியில் கத்தி, துப்பாக்கியுடன் பொதுவெளியில் ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி,
டெல்லியில் கத்தி, துப்பாக்கியுடன் பொதுவெளியில் ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிரிஷன் ஷெர்வால் என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த இவர், தனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் நாது காலனி பகுதியில் ஓடியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, கிரிஷன் ஷெர்வாலை மடக்கி பிடித்த போலீசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story