ஹிஜாப் விவகாரத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தல்
ஹிஜாப் விவகாரத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தி உள்ளார்.
உப்பள்ளி;
முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நிருபர்கள் ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்து ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:-
ஹிஜாப் விவகாரம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. சமீபகாலமாக ஈரான், ஈராக்கிலும் ஹிஜாப் விவகாரம் எழுந்துள்ளது. எனவே, ஹிஜாப் விவகாரத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஹிஜாப் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும்.
மாநில முதல்-மந்திரியாக இருந்து தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சித்தராமையா பொறுப்பு உணராமல் பேசுவது சரியல்ல. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் சமூகத்தில் அமைதியின்மை ஏற்படுகிறது. இதனை சட்ட கட்டமைப்பிற்குள் மாநில அரசு உரிய முறையில் கையாளும்.
இவ்வாறு அவர் கூறினார்.