கள்ளக்காதலனை கொன்ற கணவர்; ரெயில் முன் பாய்ந்து மனைவி தற்கொலை


கள்ளக்காதலனை கொன்ற கணவர்; ரெயில் முன் பாய்ந்து மனைவி தற்கொலை
x

ராஜஸ்தானில் கள்ளக்காதலனை கணவர் கொன்ற வருத்தத்தில் ரெயில் முன் பாய்ந்து மனைவி தற்கொலை செய்துள்ளார்.

பிகானிர்,

ராஜஸ்தானின் பிகானிர் மாவட்டத்தில் வசித்து வந்த 40 வயது பெண் ஒருவர் தனது கணவரின் மருமகன் உறவு முறையிலான 45 வயது நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுபற்றி அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் அவர் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை போஜாசா பகுதியில் கணவரின் மருமகன் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணின் கணவர், அந்த நபரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கணவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கள்ளக்காதலன் கொல்லப்பட்ட வருத்தத்தில் இருந்த அந்த பெண், ஸ்ரீதுங்கர்கார் பகுதியில் ரெயில் ஒன்றின் மீது பாய்ந்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிகானிரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story