கெம்பேகவுடா விருது வழங்கும் விழா ஆகஸ்டு முதல் வாரத்தில் நடத்த திட்டம்
கெம்பேகவுடா விருது வழங்கும் விழாவை வருகிற ஆகஸ்டு முதல் வாரத்தில் நடந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு:-
பெங்களூருவை நிர்மாணித்தவர் நாடபிரபு கெம்பேகவுடா. அவரது பெயரில் ஆண்டுதோறும் கர்நாடக அரசு சிறந்த சமூக சேவையாற்றியவர்களுக்கு கெம்பேகவுடா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான கெம்பேகவுடா விருது வழங்கும் விழாவை வருகிற 28-ந்தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று (26-ந்தேதி) அல்லது நாளை (27-ந்தேதி) பெங்களூருவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கெம்பேகவுடா விருது வழங்கும் விழாவை ஆகஸ்டு முதல் வாரத்தில் நடத்த அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆகஸ்டு 5-ந்தேதிக்குள் விழா நடைபெறும் என கூறப்படுகிறது.
கெம்பேகவுடா விருதுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்ய மாநில போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விருது பெறுபவர்களை தேர்வு செய்து பட்டியலை இறுதி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.