மராட்டிய சட்டசபை நாளை கூடுகிறது


மராட்டிய சட்டசபை நாளை கூடுகிறது
x

இந்த கூட்டத் தொடரில் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை,

மராட்டியத்தில் புதிய அரசு அமைந்ததை அடுத்து, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது முதலாவது மந்திரி சபை கூட்டத்தை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சட்டசபை கூட்டத்தை கூட்டுவது என மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டது.

முதல் நாள் கூட்டத்தில் சபாநாயகரை தேர்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத் தொடரில் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கோவா ஓட்டலிலேயே தங்க வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story