கேரளாவில் விபத்தில் சிக்கிய முதியவரை தனது வாகனத்தில் மருத்துவமனை அனுப்பிய அமைச்சர்..!


கேரளாவில் விபத்தில் சிக்கிய முதியவரை தனது வாகனத்தில் மருத்துவமனை அனுப்பிய அமைச்சர்..!
x

கேரளாவில் விபத்தில் சிக்கியவரை அமைச்சர் முகமது ரியாஸ் தனது பாதுகாப்பு வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், ஆக்குளம் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர் இருவர் திடீரென விபத்தில் சிக்கி சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சென்ற அம்மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், விபத்தை கண்டதும் காரில் இருந்து கீழே இறங்கி தனது பாதுகாப்பு வாகனத்தில் அந்த முதியவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கிய முதியவரை தனது வாகனத்தில் மருத்துவமனை அனுப்பி வைத்த அமைச்சரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story