காஷ்மீரில் ஆயுதங்கள் கடத்திய மர்ம டிரோன்..!


காஷ்மீரில் ஆயுதங்கள் கடத்திய மர்ம டிரோன்..!
x

காஷ்மீரில் மர்ம டிரோன் ஒன்று ஆயுதங்களை கடத்தியுள்ளது.

ஜம்மு,

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் மர்மபெட்டி ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தடயவியல்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.

அவர்களின் உதவியுடன் அதனை பிரித்து பார்த்தபோது அதனுள்ளே 3 கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் இருப்பதை கண்டனர். அதனை பறிமுதல் செய்த போலீசார் அதுகுறித்து விசாரித்து வருகின்றனர். பயங்கரவாதிகளுக்காக டிரோனில் சர்வதேச எல்லைக்கோட்டை கடந்து வான்வழியாக இது வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Next Story