நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... டாக்டர்கள் கூறும் அறிவுரை என்ன?


நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... டாக்டர்கள் கூறும் அறிவுரை என்ன?
x

நாட்டில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் டாக்டர்கள் கூறும் அறிவுரையை பற்றி தெரிந்து கொள்வோம்.



புதுடெல்லி,



இந்தியாவில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரம் எண்ணிக்கைக்கு கூடுதலாக பதிவாகி வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,419 பேருக்கு தொற்று பதிவாகி, 13 சதவீதம் என்ற அளவை தொற்று விகிதம் நெருங்கி உள்ளது.

நாடு முழுவதும் பரிசோதனை முடிவில், கடந்த 24 மணிநேரத்தில் 19,406 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்று உயர்ந்து அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுவரை டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என்றும் பின்னர் பி.ஏ. வகை என தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த போதிலும், லேசான அறிகுறிகளே அதிகளவில் காணப்படுகின்றன என நிபுணர்கள் கூறியுள்ளனர். டெல்லியில், 80 முதல் 90 வயது வரையிலான நோயாளிகள் நீரிழிவு உள்ளிட்ட பிற பாதிப்புகளுடன் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் லேசான கொரோனா அறிகுறிகளே உள்ளன என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்ளாதவர்கள் மற்றும் கொரோனா விதிகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் பிரச்சனையில் சிக்குகின்றனர் என டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவரான திரேன் குப்தா கூறியுள்ளார்.




நாட்டில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் வரும் சூழலில், டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையின் மருத்துவர் சுரேஷ் குமார் இன்று கூறும்போது, கொரோனா வைரசானது உருமாற்றம் அடைந்து வருவதும் தொற்று அதிகரிப்புக்கு காரணம். ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ்களை எடுத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, ஒரு புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா வரும்போது, முன்பே தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களும் அதன் பாதிப்பிலிருந்து மீண்டு, வெளியே வரவேண்டும். அந்த வைரசானது, முன்பே உருவான ஆன்டிபாடிகளையும் பாதிப்படைய செய்யும்.






எனினும், பலருக்கு லேசான தொற்றுகளே உள்ளன. பெருமளவிலான நோயாளிகள் மருத்துவமனையில் சேர வேண்டிய தேவையில்லை. அவர்களது ஆக்சிஜன் அளவு குறையவில்லை என கூறியுள்ளார்.

எனினும், பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்ட நோயாளி ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற கூடுதல் தகவலையும் டாக்டர் சுரேஷ் தெரிவித்து உள்ளது கொரோனாவின் வீரியம் பற்றி கவனிக்கத்தக்க விசயங்களில் ஒன்றாகும்.

இந்த புதிய பாதிப்புகளில், வைரசின் உருமாற்றம் அடைந்த தொற்றுகளும் காணப்படுகின்றன. பி.ஏ.-4 மற்றும் பி.ஏ.-5 ஆகிய தொற்றுகளும் உள்ளன. அவற்றையும் ஆய்வு செய்து வருகிறோம். 100க்கும் கூடுதலான மாதிரிகளில் மரபணு தொடர் கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இதன் அறிக்கை அடுத்த வாரம் வெளிவரும். அதன்பின்னரே அது புதிய வகையா? இல்லையா? என தெரிய வரும் என கூறியுள்ளார்.

இணைநோய்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என கூறும் அவர், நிம்மோனியா உள்ளிட்ட தொற்றுகள் அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளன என அவர் கூறுகிறார்.

தீவிர நோய் பாதிப்புகளால் முன்பே பாதிக்கப்பட்டவர்கள் அதிக இருக்க வேண்டும் என எச்சரிக்கும் அவர், மக்கள் கவனமின்றி அலட்சியமுடன் உள்ளனர். சமூக இடைவெளி மற்றும் பிற கொரோனா விதிகளை காற்றில் பறக்க விடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவி 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தொற்றிலிருந்து காத்து கொள்ள முக கவசங்களை அணிய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். அது, கொரோனா தொற்று மட்டுமின்றி, தீவிரமுடன் பரவி வரும் குரங்கம்மை மற்றும் மாசுபாடு போன்ற பாதிப்புகளில் இருந்தும் பொதுமக்களை பாதுகாக்கும் என அவர் கூறியுள்ளார்.


Next Story