குடோனில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் அடையாளம் தெரிந்தது


குடோனில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் அடையாளம் தெரிந்தது
x

குடோனில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் அடையாளம் தெரிந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

நெலமங்களா:-

பெங்களூரு அருகே நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளியில் உள்ள குடோனில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்த மாதநாயக்கனஹள்ளி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். முதலில் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஹாசன் மாவட்டம் பேளூரை சேர்ந்த நடராஜ் என்ற முல்லு (வயது 37) என்று அடையாளம் காணப்பட்டது. தற்போது அவர் பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் வசித்து வந்தார். நடராஜ் பிரபல ரவுடி ஆவார். முன்விரோதம் காரணமாக அவரை மர்மநபர்கள் கொலை செய்து உடலை குடோனுக்குள் போட்டு விட்டு சென்றது தெரிந்தது.


Next Story