திருமணத்திற்கு செல்லாமல் ஆற்றில் சிக்கிய நாயை மீட்க சென்ற நபர்; பாராட்டுகள் குவிந்தன


திருமணத்திற்கு செல்லாமல் ஆற்றில் சிக்கிய நாயை மீட்க சென்ற நபர்; பாராட்டுகள் குவிந்தன
x

திருமண நிகழ்ச்சியை தவிர்த்து ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாயை காப்பாற்ற சென்ற நபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

புதுடெல்லி,

வளர்ப்பு பிராணிகளில் ஒன்றான நாய் மீது அன்பு செலுத்துபவர்கள் அதிகம். அதே நேரத்தில், அந்த அன்பு வெளிப்படும் வகையில் அதனை காப்பாற்ற சென்ற நபரை பற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நேரத்தில் அதன் ஓரத்தில் நாய் ஒன்று சிக்கி தவித்தது. அதனால், வேறு எந்த பகுதிக்கும் செல்ல முடியவில்லை. இதனை கவனித்த, கோட், சூட் அணிந்து திருமணத்திற்கு செல்ல இருந்த நபர் ஒருவர் அதனை தவிர்த்து விட்டு நேராக நாயை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்.

அவர் தனது கோட்டை கழற்றி விட்டு சுவரின் ஓரத்தில் படுத்தபடி, ஆற்றில் ஓடி கொண்டிருக்கும் நீரின் மேற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த நாயை, கையை நீட்டி பிடித்து மேலே தூக்குகிறார். அவருடன் வந்த மற்றொரு நபரும் அவருக்கு உதவுகிறார். இதன்பின்பு நாயை கரை சேர்த்து 3 பேரும் திருமண நிகழ்ச்சிக்கு செல்கின்றனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதனை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். 600க்கும் மேற்பட்டோர் விமர்சனங்களை பதிவிட்டு உள்ளனர். அவர்களில் பலரும் அந்த நபரை பாராட்டி வருகின்றனர்.


Next Story