ஒடிசா சென்ற தமிழக குழு இன்று சென்னை திரும்புகின்றனர் ..!


ஒடிசா சென்ற தமிழக குழு இன்று சென்னை திரும்புகின்றனர் ..!
x

தமிழக பயணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து அவர்களை பற்றி தகவல்களை சேகரித்து உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாலசோர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு நேற்று ஒடிசா பயணம் மேற்கொண்டனர்.

ஒடிசா ரெயில் விபத்தில் விபத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்டு சென்னை அழைத்து வர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் புறப்பட்டு சென்ற அதிகாரிகள் குழுவினர் அம்மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து தமிழக பயணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து அவர்களை பற்றி தகவல்களை சேகரித்து உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அம்மாநில முதல் மந்திரியையும் தமிழக குழு சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்

சென்னை உள்ளிட்ட மற்ற பகுதிகளை சேர்ந்த பயணிகள் எத்தனை பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உதவிகள் செய்யவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒடிசாவில் சென்ற தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு, இன்று சென்னை திரும்புகிறது.


Next Story