ஜோஷிமத் நகர மக்களின் குரலை கேட்க வேண்டும் - பிரியங்கா வலியுறுத்தல்


ஜோஷிமத் நகர மக்களின் குரலை கேட்க வேண்டும் - பிரியங்கா வலியுறுத்தல்
x

ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு மற்றும் நிலவெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, மெல்ல மெல்ல பூமிக்குள் புதைந்து வருகிறது.

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு மற்றும் நிலவெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, மெல்ல மெல்ல பூமிக்குள் புதைந்து வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜோஷிமத் நகரின் நிலவரம் மிகவும் கவலை அளிக்கிறது. முதல் முன்னுரிமை பணியாக, அந்நகர மக்களின் குரலை மத்திய, மாநில அரசுகள் கேட்க வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

மலைப்பகுதிகளில் நடக்கும் கட்டுமான பணிகள் குறித்த அவர்களின் கருத்தை கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்..

1 More update

Next Story