எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம் - நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி


எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம் - நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி
x
தினத்தந்தி 31 Jan 2023 10:50 AM IST (Updated: 31 Jan 2023 10:56 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக நடப்பு பட்ஜெட் இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தனது முதல் உரையை நிகழ்த்தும் முக்கியமான நாள் இன்று. ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது மிகப்பெரிய கவுரவம்.

பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி ஜனாதிபதி உரையை நிகழ்த்துவது நாட்டுக்கே பெருமை. ஜனாதிபதியின் உரை பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாக இருக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக நடப்பு பட்ஜெட் இருக்கும். நமது நிதி மந்திரியும் ஒரு பெண்தான். அவர் நாளை மேலும் ஒரு பட்ஜெட்டை நாட்டின் முன் தாக்கல் செய்கிறார். இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே இந்தியாவின் பட்ஜெட்டைப் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் பேச உரிய நேரம் அளிக்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story