செல்போனில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டதால் அண்ணனை அடித்து கொன்ற தம்பி..!


செல்போனில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டதால் அண்ணனை அடித்து கொன்ற தம்பி..!
x
தினத்தந்தி 2 Aug 2022 1:02 PM IST (Updated: 2 Aug 2022 1:03 PM IST)
t-max-icont-min-icon

பாலக்காடு அருகே அண்ணன் அடித்து கொலை தம்பியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலக்காடு:

பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ளது முளையன் காவு. இங்கு வசிப்பவர் சர்வர் பாபு (வயது 24). இவரது தம்பி சக்கீர்(18). நேற்று இரவு 10 மணியளவில் அண்ணன் தனது செல்போனில் அதிக அளவு சத்தத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த தம்பி 'சத்தத்தை குறைத்து வை தூங்க முடியவில்லை' என கூறியுள்ளார். ஆனால் அண்ணன் சத்தத்தை குறைத்து வைக்கவில்லை. இதில் கோபமடைந்த தம்பி எழுந்து சென்று, பின் பகுதியில் உள்ள ஒரு மரக்கட்டையை எடுத்து வந்து அண்ணன் என்றும் பாராமல் தலையில் ஓங்கி பலமுறை அடித்துள்ளார்

இதில் மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் அண்ணன் மயங்கி விழுந்தார். பின்பு தம்பி அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சர்வர் பாபுவை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அண்ணன் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். விவரம் அறிந்த போலீசார் தம்பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story