'ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் அவர்கள் நோக்கம்'- அமித்ஷா விளக்கம்


ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் அவர்கள் நோக்கம்- அமித்ஷா  விளக்கம்
x

காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர்கள் சாதாரண உடையில் போராட்டம் நடத்தியதை பலதடவை பார்த்துள்ளோம். ஆனால், இன்று (நேற்று) அவர்கள் கருப்பு உடை அணிந்ததற்கான காரணம், இது ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடந்த நாள் ஆகும்.

550 ஆண்டுகள் நீடித்த பிரச்சினைக்கு பிரதமர் மோடி அமைதியான முறையில் தீர்வு கண்டார். கோவில் கட்டுமான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், ராமர் கோவில் பிரச்சினையை தீர்க்க எதுவுமே செய்யவில்லை.

ராமர் கோவிலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாததால், மறைமுகமாக இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மற்றபடி, விலைவாசி உயர்வு, அமலாக்கத்துறை விசாரணை என்பதெல்லாம் வெறும் சாக்குபோக்குதான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story