"ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை"- மல்லிகார்ஜுன கார்கே பேட்டி


ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை- மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
x
தினத்தந்தி 16 Dec 2023 11:45 AM GMT (Updated: 16 Dec 2023 11:47 AM GMT)

நாடாளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது;

"நாடாளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இதுகுறித்து அவையில் மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை.

இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. ஆனால் அதே சமயம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுவதிலும் அர்த்தம் இல்லை. பாஜக அரசு காங்கிரசை குறை கூறுவதிலும், நேரு, காந்தி போன்ற தலைவர்களை அவமதித்து வாக்கு சேகரிப்பதிலும்தான் குறியாக உள்ளது." இவ்வாறு கூறினார்.


Next Story