ஜெகதீஷ் ஷட்டருக்கு எந்த சலுகையும் அளிப்பதாக கூறவில்லை - டி கே சிவக்குமார்
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஜெகதீஷ் ஷட்டருக்கு எந்த சலுகையும் அளிப்பதாக கூறவில்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று கட்சியில் இணைத்துக்கொண்டார் ஜெகதீஷ் ஷெட்டர்.
இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஜெகதீஷ் ஷெட்டர் எந்த நிபந்தனையும் எங்களிடம் விதிக்கவில்லை. நாங்களும் அவருக்கு எந்த சலுகையும் அளிப்பதாக கூறவில்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் மாண்புகளை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க விரும்புகிறோம், அதை காங்கிரசால் மட்டுமே செய்ய முடியும் என்றார்.
Related Tags :
Next Story