ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தால் பாஜகவுக்கு அச்சம்: காங்கிரஸ்


ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தால் பாஜகவுக்கு அச்சம்: காங்கிரஸ்
x

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் பாஜக கலக்கம் அடைந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் பாஜக கலக்கம் அடைந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீக்‌ஷித் கூறியதாவது:

"பாஜகவை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. இந்திய ஒற்றுமைப் பயணம் அவர்களுக்கு இம்சையாக இருக்கிறது என கருதுகிறேன். ராகுல் காந்தி சதாம் உசேனை போல தோற்றத்தை மாற்றியிருப்பதாக கூறும்

அளவுக்கு பாஜக தரம் தாழ்ந்துள்ளது. பிரதமர் மோடி கூட நீண்ட தாடி வைத்திருந்தார். அப்போது அதுகுறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் உண்மையான மக்கள் பிரச்சினைகளை பேசுகிறோம்.

பிரதமர் தனக்கு எதிராக சதி நடப்பதாக சொல்லியுள்ளார். பொதுவாக பூட்டிய அறைக்குள்தான் சதித் திட்டங்கள் தீட்டப்படும். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் யாத்திரை பயணத்தில் அல்ல" என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்தீப் தீக்‌ஷித் பதிலடி கருத்தைப் பதிவு செய்துள்ளார்.


Next Story