திருவனந்தபுரம்: லூலூ மாலில் மெகா தள்ளுபடி ஆபர்... விடிய விடிய அலைமோதிய மக்கள் கூட்டம்


திருவனந்தபுரம்: லூலூ மாலில் மெகா தள்ளுபடி ஆபர்... விடிய விடிய அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 9 July 2022 10:35 AM IST (Updated: 9 July 2022 10:42 AM IST)
t-max-icont-min-icon

மால் திறப்புவிழாவை முன்னிட்டு மெகா தள்ளுபடி ஆபர் அறிவிக்கப்பட்டதால், பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் மாலுக்கு படையெடுத்தனர்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள லூலூ மாலில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதால், நள்ளிரவில் கட்டுக்கடங்காமல் கூடிய மக்கள் கூட்டம் பொருட்களை வாங்க குவிந்தது.

மால் திறப்புவிழாவை முன்னிட்டு மெகா தள்ளுபடி ஆபர் அறிவிக்கப்பட்டது. இதனால், குறைந்த விலையில் பொருட்கள் வாங்குவதற்காக மாலில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியாமல் ஊழியர்கள் திணறினர்.

மேலும், ஊழியர்களுக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. நள்ளிரவில் மக்கள் பொருட்கள் வாங்க மாலுக்கு படையெடுத்த சம்பவத்தால், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் கானப்பட்டது.

1 More update

Next Story